தனது ஆஸ்தானக் கலைஞர்களோடு முதல் படத்தைத் தயாரிக்கும் நெல்சன்!

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (09:06 IST)
சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக நான்கே படங்களில் உயர்ந்துள்ளார் நெல்சன். அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது நெல்சன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை நெல்சனின் இணை இயக்குனர் சிவபாலன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கவின் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அனிருத் இசையமைக்கிறாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்