கமல் நெல்சன் தனுஷ் கூட்டணியில் புதிய படம்… லேட்டஸ்ட் தகவல்!

சனி, 8 ஜூலை 2023 (09:21 IST)
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

இதையடுத்து இப்போது அவர் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்சன் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது வரிசையாக இளம் நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு, சிவகார்த்திகேயன் வரிசையில் இப்போது அதில் தனுஷும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்