கன்னட படத்தில் திரெளபதியாக நடிக்கும் நயன்தாரா??

செவ்வாய், 4 ஜூலை 2017 (16:40 IST)
தமிழில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 


 
 
கன்னடத்தில் உருவாகவிருக்கும் 'குருஷேத்திரா' திரைப்படத்தில் நயன்தாராவை திரெளபதியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கன்னட திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் 'குருஷேத்திரா' படம் உருவாக்கப்படும் என தெரிகிறது. 
 
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னட சினிமாவிலும் நடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கனவே சூப்பர் என்னும் கன்னட படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்