இதில், ‘கல்யாண வயசு’ பாடல் 4 நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதி, முதன்முறையாகப் பாடலாசிரியர் ஆகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ வெளியான 4 நாட்களில் 5.5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். நயன்தாரா மற்றும் யோகிபாபு இருவரும் இந்தப் பாடலில்இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.