நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:37 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ள அடுத்த படத்தின் தகவல் தற்போது கசிந்துள்ளது அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர் 
 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அல்போன்ஸ் புத்தரன் இயக்கும் மலையாளப் படம் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கோல்ட் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டைட்டில் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே நயன்தாரா மற்றும் பகத் பாசில் நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாட்டு என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு முன்னரே கோல்ட் படத்தை இயக்க அல்போன்ஸ் புத்திரன் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
நயன்தாரா ஏற்கனவே ‘அண்ணாத்த’, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்