நயன்தாராவின் 'ஐரா' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

புதன், 2 ஜனவரி 2019 (08:35 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு  வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் 'விஸ்வாசம்', 'கொலையுதிர்க்காலம், 'ஐரா', சயிரா நரசிம்மரெட்டி, இன்னும் டைட்டில் வைக்கப்படாத சிவகார்த்திகேயன் திரைப்படம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நயன்தாராவின் 'ஐரா' படத்தின் இரண்டாவது லுக் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 5ஆம் தேதி  மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்களையும் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கேஆர்ஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்