இந்நிலையில் இந்த படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாரா “ஒரு பேட்டியில் ஒரு நடிகை எனது பெயரை சொல்லாமல் நான் நடித்த காட்சி குறித்து பேசியிருந்தார். ஒரு மருத்துவமனை காட்சியில் நான் லிப்ஸ்டிக் போட்டு தலைமுடி கலையாமல் நடித்திருந்ததாக பேசியிருந்தார். ஒரு ரியலிஸ்டிக் படமாக இருந்தால், அதன் இயக்குனர் கேட்டால் நான் அவ்வாறு நடித்திருப்பேன். குறிப்பிட்ட அந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதன்படி நடித்தேன்” என கூறியுள்ளார்.
நயன்தாராவின் படக்காட்சியை விமர்சித்த நடிகை யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் நெட்டிசன்கள் பலர் மாளவிகா மோகனின் நேர்காணலை ஷேர் செய்துள்ளனர். அதில் நயன்தாரா பேரை குறிப்பிடாமல் பேசிய மாளவிகா மோகனன், மருத்துவமனை காட்சியில் லிப்ஸ்டிக் போட்டிருந்ததாக பேசியுள்ளார். இந்த இரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.