நயன்தாரா பட இயக்குநரின் அடுத்த படம்! புதிய அப்டேட்

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:23 IST)
நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ஐரா பட இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மா, லட்சுமி, உள்ளிட்ட குறும்படங்களை இயக்கியவர் சர்ஜூன். இவரது இயக்கத்தில் நயன் தாரா நடிப்பில் வெளியான படம் ஐரா. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சர்ஜூன் கதை, வசனம், எழுதி இயக்கும் அடுத்த படம் குறித்ட தகவல் வெளியாகியுள்ளது.

இப்புதிய படத்தின் கலையரசன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடொயாக மிர்னா என்ற மலையால நடிகை நடிக்கவுள்ளார். இப்படத்தை எஸ்.கே.எல்.எஸ் கேலக்சி மால் புரொடெக்சன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்