நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் தமிழில் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவரின் மூக்குத்தி அம்மன் திரைப்பட வெற்றியும் பிறந்தநாள் கொண்டாட்டமும் அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.