தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வரும் நிலையில், இவர்கள் எப்போது திருமணம் செய்யப் போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை நயன் தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இரு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தல் நடந்ததாகக் கூறினார்.
இன்று , நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருச்சிஸ்ரீரங்க நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின், லால்குடி அருகேயுள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.