விவேக் அவர்களுடன் நான் பல படங்களில் நடித்து உள்ளேன் என்றும், குறிப்பாக 'விஸ்வாசம் படத்தில் அவருடன் நடித்தபோது ஏற்பட்ட நினைவலைகள் எப்போதும் எனது மனதில் ஞாபகம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு சீக்கிரம் அவர் சென்று விடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாழ்க்கை என்பது கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது என்பது அவரது இழப்பு மூலம் தெரிய வருகிறது என்றும் அவரது மறைவை தாங்க கூடிய அளவுக்கு கடவுள் அவருடைய குடும்பத்திற்கு பலத்தை அளிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்