பிரபல தமிழ் நடிகருக்கு தேசிய விருது...ரசிகர்கள் வாழ்த்து மழை

வியாழன், 22 ஏப்ரல் 2021 (21:30 IST)
கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பங்களிப்பு செய்ததற்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ராஷ்டிரிய சிஷா கவுரவ் புரஸ்கார் விருது வழங்கியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி நடிகராகவும் மிமிக்ரி ஆர்டிஸ்டாகவும் வலம் வருபவர் நடிகர் தாமு.

சினிமாவைக் கடந்து இவர் கல்வித்துறையில் சிறந்த பங்களிப்பு ஆற்றிவருகிறார்.  இதற்காக இவருக்கும் கல்வி சேவையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பங்களிப்பு செய்ததற்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ராஷ்டிரிய சிஷா கவுரவ் புரஸ்கார் விருது வழங்கியுள்ளது. இதனால் அவருக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்