நானியின் ஹாய் நானா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சனி, 30 டிசம்பர் 2023 (15:36 IST)
தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி நடித்த ஹாய் நானா திரைப்படம் ம் டிசம்பர் 7 ஆம் தேதி தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சௌரவ் இயக்கியிருந்தார். ஹெஷாம் அப்துல் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார்.  ஒரு முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். கணவன் மனைவி மற்றும் குழந்தையை மையமாகக் கொண்ட ஒரு கதைக்களமாக அமைந்தது. ஆனால் ரசிகர்களைப் பெரியளவில் இந்த படம் கவரவில்லை.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸில் வரும் ஜனவரி நான்காம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்