நடிகை நந்திதாவிடம் எல்லை மீறி கேள்வி கேட்ட நபர்… நெத்தியடி பதிலால் கப்சிப்!

வெள்ளி, 9 ஜூலை 2021 (17:03 IST)
நடிகை நந்திதா சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ்வில் உரையாடினார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. 

இருந்தும் தொடர்ந்து முயற்சித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளில் நடித்து வருகிறார்.  சமூகவலைதளமான இன்ஸ்டாவில் இவர் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதையடுத்து ரசிகர்களோடு உரையாடுவதற்காக லைவ் உரையாடலில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அநாகரிகமாக ஒரு நபர் ‘உங்கள் சைஸ் என்ன?’ எனக் கேட்க அதனால் கடுப்பான நந்திதா ‘இதற்கான சரியான பதிலுக்கு நீங்கள் உங்கள் அம்மா மற்றும் சகோதரிகளிடம் இந்த கேள்வியைக் கேளுங்கள்’ என கோபமாக கூற அந்த நபர் அப்படியே கப்சிப் ஆகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்