அது உண்மையில்லை, நம்பவேண்டாம் – வடிவேலு போஸ்டர் குறித்து வெளியான தகவல்!

சனி, 8 மே 2021 (08:54 IST)
இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு காமெடி கௌபாய் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு 2011 க்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவர் மீம்ஸ் இல்லாத நாட்களே தமிழர்களுக்கு இல்லை என்ற அளவில் சமூகவலைதளமெங்கும் அவர் முகமே இருக்கிறது. இந்நிலையில் இப்போது அவர் சூதுகவ்வும் புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் காமெடி கௌபாய் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்துக்காக ஒய்நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்க உள்ளார் என்று ஒரு போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் உலா வந்தது.

ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்றும் நலன் இப்போது ஆர்யா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் ஒரு படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும் மற்ற வேலைகளில் எதிலும் கவனம் செலுத்த வில்லை என்றும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்