அதன் பிறகு கிசுகிசுக்களுக்கு பதில் அளித்த நடிகை சோபிதா துலிபாலா "என்னவென்றே தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என எனக்கு அவசியமில்லை. நான் எந்த தவறும் செய்யாத நேரத்தில் அது பற்றி ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் ? "அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கு பதில் கொடுப்பதை விட, அவரவர் வாழ்க்கையை பார்க்க வேண்டும்" என்றார். இந்நிலையில் தற்போது டோலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக நாக சைத்தாயா சோபிதாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.