நாக சைதன்யா படத்தில் கீர்த்தி சுரேஷ்… தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வருமா?

சனி, 24 ஜூன் 2023 (08:53 IST)
தெலுங்கின் பிரபல நடிகரான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேங்க்யூ மற்றும் கஸ்டடி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் இப்போது அவர் கார்த்திகேயா 2 என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பேன் இந்தியன் படமாக இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்