இறந்தும் வாழும் கலைஞன் – ந. முத்துக்குமாரின் இறுதிப்பாடல் ?

வெள்ளி, 7 டிசம்பர் 2018 (11:06 IST)
தமிழ்த் திரையுலகில் கடந்து சில ஆண்டுகளாக கோலோச்சியப் பாடலாசிரியர் ந. முத்துக்குமார்  2 ஆண்டுகள் கழித்து அவர் எழுதியப் பாடல் வெளியாகி இருக்கிறது.

ந முத்துக்குமார் காலமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் அவர் எழுதியப் பாடல்களின் காலம் முடியவில்லை. வாழும் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் பாட எழுதியப் பாடலாசிரியர்கள் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் ந முத்துக்குமார்.

ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளருடனான கூட்டணி சிறப்பாக அமைந்து காலம் காலமாகப் பேசப்படும். உதாரணமாக எம்.எஸ்.வி- கண்ணதாசன், இளையராஜா- வாலி, ரஹ்மான் – வாலி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ந. முத்துக்குமார் மட்டுமே தான் பணி புரிந்த அனைத்து இசையமைப்பாளர்களுடனும் நல்ல கெமிஸ்ட்ரியில் இருந்தார் என்றால் அது மிகையாகாது.

இளையராஜாவுக்கு தன் முதல் பாடலை எழுதிய முத்துக்குமார், யுவனின் கூட்டணிக்குப் பிறகு கவனிக்கத்தக்கப் பாடலாசிரியராக மாறினார். அதன் பின் ஹேரிஸ் ஜெயராஜ் மற்றும் ரஹ்மானோடு பணியாற்றிப் பல காலத்தால் அழியாதப் பாடல்களைக் கொடுத்தார். இன்றைய காலகட்டத்தின் ஹீரோவான அனிருத் இசைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படி அனைத்து இசையமைப்பாளர்களோடும் நல் உறவில் இருந்தததால்தான் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் அவரால் பாடல்கள் எழுத முடிந்தது. தொடர்ந்து 2 வருடங்கள் தேசிய விருதுகள் வாங்கிய சாதனையையும் படைக்க முடிந்தது.

அவர் இறந்த பின் தற்போதும் அவர் எழுதியப் பாடல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடலும் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் சர்வம் தாளமயம் படத்தில் இடம்பெற்றுள்ள மாயாப் பாடலும் அதற்கு சான்றாக விளங்குகின்றன.

மனிதன் மறையலாம் கலைஞன் ஒருநாளும் மறைவதில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்