அஜயன் பாலா இயக்கும் புதிய படத்தில் ந முத்துகுமாரின் பாடல்!

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:29 IST)
எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா இப்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். ஸ்ரீராம் கார்த்திக் இந்த படத்தில் நாயகனாக நடிக்க யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்க, செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் அஜயன் பாலா “சூழலியல் பின்னணியில் உருவாகும் கதையாக இந்த படம் உருவாகிறது. தமிழில் இந்த ஜானரில் இதற்கு முன்னர் படம் வந்ததில்லை. இந்த படத்தில் ந முத்துக்குமார் முன்பு எழுதிய ஒரு பாடலை பயன்படுத்துகிறோம். அவர் எழுதிய கடைசி பாடலாக இந்த பாடல் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

ந முத்துக்குமார் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலமானார். அதன் பின்னர் 8 ஆண்டுகள் ஆகியும் அவர் பாடல் ஒன்று படத்தில் இடம்பெறுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்