ஒரு வழியாக தொடங்கும் விஜய் சேதுபதி-மிஷ்கின் திரைப்படம்.. எப்போது தெரியுமா?

புதன், 22 நவம்பர் 2023 (07:49 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதி நவம்பர் 24 ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாகவும், அன்று மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு மிஷ்கினே இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்