அடித்த ஜாக்பாட்… நடிகராகக் கோடிகளைக் குவிக்கும் மிஷ்கின்

சனி, 4 பிப்ரவரி 2023 (15:24 IST)
மிஷ்கின் சமீபகாலமாக படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த படம் பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அவர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்புக்காக ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் வீதம் சம்பளமாகக் கேட்கிறாராம். அதைக் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்யவும் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்