அக்கா வழியை பின்பற்றும் கீர்த்தி பாண்டியன்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!

திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:42 IST)
நடிகை கீர்த்தி பாண்டியன் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதே போல அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனுக்கும் போதுமான கவனம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது அக்கா ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது போல இப்போது கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். அதில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்