ஒப்பந்தம் ஆகி வெளிவராத படங்களே 22… இமான் பகிர்ந்த தகவல்!

vinoth

வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (09:19 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான இசையமைப்பாளராக இருந்த அவருக்கு இப்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது,

அவரது பெரும்பாலான ஹிட் பாடல்கள் பிரபு சாலமன் இயக்கியப் படங்களிலும் சிவகார்த்திகேயன் இயக்கிய படங்களிலும் இருந்து வந்தவை. ஆனால் இப்போது அவர்கள் படங்களுக்கு இமான் இசையமைப்பது இல்லை. சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இனிமேல் அவர் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என இமான் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “என்னுடைய பல பாடல்கள் வெளிவரவே இல்லை. இதுவரை நான் ஒப்பந்தமாகி 22 படங்கள் ரிலீஸாகாமல் உள்ளன. அந்த படங்களுக்காகக் கொடுத்த பாடல்களை நான் பிற படங்களிலும் பயன்படுத்த முடியாது” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்