உக்காருங்க என சொன்ன சிவகார்த்திகேயன்… முண்டாசுப்பட்டி 2 யை கையில் எடுக்கும் இயக்குனர்!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:53 IST)
இயக்குனர் ராம்குமார் இப்போது முண்டாசுப்பட்டி 2 படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.

இந்நிலையில் இப்போது முழு திரைக்கதையையும் முடித்துள்ள ராம்குமார், அதை தனுஷிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த கதை வேறு ஏதோ ஒரு படத்தின் தழுவல் என நினைக்கும் தனுஷ், இதுபற்றி இயக்குனரிடம் பேச இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து அந்த கூட்டணி உடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் ராம்குமார் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் ஆனால் உடனடியாக நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். அதனால் அவர் தேதிகள் கொடுக்கும் வரை தனது ஹிட் படமான முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளாராம் ராம்குமார். முதல் பாகத்தை தயாரித்த சி வி குமாரே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்