இதில் ஆர்யன் கானுக்கு அவர் தந்தை சார்பாக வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது. இந்நிலையில் சிறையில் உள்ள காண்டீனில் பொருட்கள் வாங்கிக் கொள்ள சிறைவிதிகளின் படி 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார். மேலும் வீடியோ கால் மூலமாகவும் குடும்பத்தினருடன் ஆர்யன் கான் பேசியுள்ளாராம்.
இந்நிலையில் மும்பை மத்திய சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஆர்யன் கான் மீதான வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கவெண்டுமென கோரப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் ஆர்யன் கான் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றம், அடுத்த வாரம் செவ்வாய் கிழமை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.