விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகனை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.
தற்போது தனது கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் முகன் தனது காதலி யார் என்பதை முதன் முறையாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அபிராமி அவருடன் காதல் வயப்பட்டார். ஆனால், முகனோ தனக்கு வெளியில் நதியா என்ற வேறொரு பெண் இருப்பதாக கூறி நல்ல தோழியாக உன்னை எனக்கு பிடிக்கும் என கூறி நிறுத்திவிட்டார்.