ஜெய் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது

வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:15 IST)
ஜெய் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர், இன்று மாலை ரிலீஸாக இருக்கிறது.

 
வெங்கட் பிரபுவின் அசோஸியேட்டான பிச்சுமணி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெய். ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அரவிந்த் குமார் இந்தப் படத்துக்கு  ஒளிப்பதிவு செய்கிறார்.
 
ஜெய்யின் நெருங்கிய நண்பரான நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது. படத்தின் தலைப்பும் அப்போதுதான்  தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்