இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மோகன்லால் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த அசுரன் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
அசுரன் படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடித்து இருந்ததால் துணிந்து அந்த படத்தை மோகன்லால் வாங்கி இருந்தார். அதேபோல் கர்ணன் படத்தில் நாயகி ரஜிஷா விஜயனும் வில்லன் லாலும் கேரளாவில் பிரபலம் என்பதால் கர்ணன் படத்தையும் மோகன்லால் வாங்கி இருப்பதாகவும் கேரளாவில் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது