அந்தாதூன் தமிழ் ரீமேக் – ஒப்பந்தமான ரீமேக் கிங் இயக்குனர் !

திங்கள், 20 ஜனவரி 2020 (14:15 IST)
அந்தாதூன் படத்தின் தமிழ் ரிமேக்கை இயக்க மோகன் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார்.

அதையடுத்து அதில் கதாநாயகனாக யார் நடிக்கப் போவது என்ற சந்தேகம் எழ, நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருக்கும் தனது மகன் பிரசாந்தைக் கதாநாயகனாக்கினார். இந்த படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரசாந்த், இதனால் இந்த படத்தை பிரபல இயக்குனர் யாராவதுதான் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இதனால் முதலில் கௌதம் மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இப்போது தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோகன் ராஜா தனது முதல் 5 படங்களை ரீமேக் படங்களாக எடுத்து அவற்றை ஹிட்டாக்கி தனது தம்பியை ஒரு ஸ்டார் நடிகராக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்