மோகன்லாலின் பரோஸ் திரைப்படத்துக்கு தடைவிதிக்க எழுத்தாளர் நோட்டீஸ்!

vinoth

சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:43 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படமாக ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடன்  Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் சிவன் படமாக்கியுள்ளார். லிடியன் நாதஸ்வரம் இந்த திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தை ஜிஜோ புன்னூல் எழுதிய நாவலான ’பரோஸ்: கார்டியன் ஆஃப் டி ‘காமா’ஸ் ட்ரஷர்’ என்ற நாவலை அடியொற்றி எடுத்துள்ளனர். ஆனால் இப்போது மலையாள எழுத்தாளர் ஜார்ஜ் துண்டி பரம்பில் பரோஸ் திரைப்படம் தன்னுடைய நாவலான மாயா-வில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி தயாரிப்பாளருக்கும் மோகன் லாலுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  காப்புரிமை பிரச்சனை முடிக்கப்படும் வரை படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது எனவும் அந்த நோட்டீஸில் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரோஸ் படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. படம் செப்டம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்