கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைஃப் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே, நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக யூட்யூபில் விமர்சனம் செய்யும் நபர்கள் இந்த படத்தை வச்சு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
இந்த நிலையில், இவ்வாறு தக்லைஃப் படத்தை விமர்சனம் செய்து உள்ள நிலையில், படத்தை வைத்து கமல்ஹாசனின் நடிப்பில் குறை சொல்ல முடியாது என்றாலும், மணிரத்னம் படுமோசமாக திரைக்கதை எழுதியுள்ளார் என்றும், ஒரு காட்சியில் கூட லாஜிக் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இவர் தான் நேற்று கன்னட மொழி விவகாரத்திற்கு கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமின்றி, தக்லைஃப் திரைப்படத்தை நான் திரையரங்கில் ஐந்து முறை பார்த்து கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவேன் என்று கூறினார். ஆனால், இன்று ஒரு முறை பார்த்ததற்கு படத்தை படுமோசமாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.