கிறிஸ்துமஸ் ரிலிஸில் இருந்து பின் வாங்கிய சசிகுமார் திரைப்படம்!

புதன், 16 டிசம்பர் 2020 (10:53 IST)
சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள எம் ஜி ஆர் மகன் திரைப்படம் கிறிஸ்துவமஸ் பண்டிகைக்கு வெளியாவதாக இருந்தது.

இயக்குனர் பொன்ராம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சத்யராஜ், சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். தீபாவளி அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால் இப்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவதில் ஆர்வம் காட்டாததால் மாஸ்டர் படத்துக்கு பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்