ரஜினியுடன் மோத முடிவெடுத்த ’எம்ஜிஆர் மகன்’

வெள்ளி, 29 நவம்பர் 2019 (22:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’தர்பார்’ படத்தை முடித்துவிட்டு அடுத்த படமான ’தலைவர் 168’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ’தர்பார்’ படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த படத்தின் சும்மா கிழி என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து டிசம்பர் 4ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகி இருப்பதாகவும் டிசம்பர் 7ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் இந்தப் படத்தை வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை இரவுபகலாக செய்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளிவருகிறது.
 
ரஜினிகாந்த் படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதால் வேறு எந்த பெரிய படமும் அன்றைய தினம் வெளியாக வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் பட்டியலில் மேலும் 2 படங்களில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
பிரபுதேவா நடிப்பில் உருவாகிய ’பொன்மாணிக்கவேல்’ என்ற திரைப்படமும் சசிகுமார் நடித்த ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்று சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
சசிகுமார், சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்