ஷ்ரூவ்வ்வ் கரணையடுத்து வைரலாகும் மெட்டி ஒலி கோபி !

திங்கள், 17 டிசம்பர் 2018 (12:40 IST)
சமூக வலைதளங்களில் வாராவாரம் ஒருவர் வைரலாவது வாடிக்கை. தற்போது அந்த வரிசையில் மெட்டி ஒலிக் கோபி வைரலாகி இருக்கிறார்.

மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும். இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இந்த நாடகத்தின் வரவேற்பால் அவர் பரத்தை வைத்து எம்டன் மகன், முனியாண்டி ஆகியப் படங்களை இயக்கினார். அதன் பின் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் பின்பு மறுபடியும் சீரியலுக்கே சென்று நாதஸ்வரம் தொடரை இயக்கினார். அதிலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று ரொமான்ஸ், ஆக்‌ஷன், செண்ட்டிமெண்ட் என நவரசமும் கலந்த நடிப்பை வெளிக்கொணர்ந்து கலக்கினார். அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மகளிருக்கு மட்டுமே செல்லப்பிள்ளையாக இருந்த திருமுருகன் சமீபகாலமாக் சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகிறார்.

சம்மந்தப்பட்ட சீரியல்களில் கோபி (திருமுருகண்0 நடித்த காதல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், செண்ட்டிமெண்ட காட்சிகளை தேடிக் கண்டு பிடித்து நெட்டிசன்கள் இப்போது வைரலாக்கி வருகின்றனர்.

இதுபோலவே சமீபத்தில் கரண், எம்.ஜி.ஆர் போன்றோர் சமூக வலைதளங்களில் நீண்ட காலத்திற்குப் பிறகு வைரலானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்