ட்ரெண்டிங்கில் "மெமரீஸ்" பட டீசர்!

சனி, 12 ஜூன் 2021 (12:07 IST)
ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டு தோட்டாக்கள் புகழ்  நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் "மெமரீஸ்" படத்தின் டீசர் வெளியானது.
 
ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த  படமான  மெமரீஸ் படத்தின் டீசர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான்  மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. 
 
வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம்  ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் படமாக இருக்கும். மேலும் இப்படம் முற்றிலும் புதிய முயற்சி. இப்படத்தில் நடிகர் வெற்றியின் சிறந்த நடிப்பை காணலாம் என அப்படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் கூறியுள்ளார். இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் கொரோனா ஊரடங்கு முடிவில் அறிவிக்கப்படும். இதோ டீசர் லிங்க். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்