சசிகலாவுக்காக காத்திருக்கும் தலைவர் பதவி: டிடிவி பேட்டி!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (13:34 IST)
சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி தீவிரமான தேர்தல் பணிகள் இறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அமமுகவின் கூட்டம் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
 
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினரனை முதல்வர் இருக்கையில் அமர செய்வதே லட்சியம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த எந்த முடிவையும் எடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், 3வது அணி இல்லை. அமமுக அமைக்கும் அணிதான் முதல் அணி. எங்களது கட்சியுடன் தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. 
 
கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என அமமுகவினர் விரும்புகின்றனர். சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அவருக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்