"என்னை கெடுத்ததே அவ தான்" அவளால் தான் நான் பிக்பாஸிற்கு போக முடியல..!

செவ்வாய், 16 ஜூலை 2019 (12:02 IST)
பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து மேலும் பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். 


 
இந்நிலையில் தற்போது, நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியதாவது, மீரா மிதுன் இடத்திற்கு நான் செல்லவேண்டியதாக இருந்தது ஆனால் அதனை கடைசி நேரத்தில் வந்து கெடுத்துட்டால் மீரா. அதற்கு முக்கிய காரணம் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர் என்பதால் கடைசி நிமிடத்தில் தேர்வு செய்துவிட்டனர். 
 
மேலும், மீரா மிதுன் பற்றி பேசிய அவர், அவள் ஒரு பிராடு, அவர் உண்மையான குணமே அது தான். தன்னை பற்றி எப்போதும் பெருமை பேசிக்கொள்வார். வெளியில் எப்படி பலரையும் அவர் ஏமாற்றினாரோ அப்படித்தான் உள்ளேயும் நடந்துகொள்கிறார். அவரை பற்றி சொல்லவேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம் என்று கூறி கடுப்பானார் ஷாலு ஷம்மு. 


 
அதேபோல வனிதா வெளியேற்றப்பட்டதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17ஆவது போட்டியாளராக ஆல்யா மானசா தான் செல்லப்போகிறா.ர் ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை கண்டிப்பாக இரண்டு விஜய் டிவி பிரபலங்கள் இருப்பார்கள். 


 
அந்த வகையில் தற்போது கவின் இருக்கிறார், அதனால் இரண்டாவது விஜய் டிவி பிரபலமாக ஆலியா மானசா செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் நடித்து வந்த ராஜ ராணி சீரியலும் தற்போது நிறைவடைந்துவிட்டது எனவே  நிச்சயம் அவர் செல்வது உறுதி என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்