புதிய படத்தை திருட்டுத்தனமாக படம் பிடித்த தியேட்டருக்கு சீல்: விஷால் அதிரடி

செவ்வாய், 12 ஜூன் 2018 (23:27 IST)
புதிய திரைப்படங்கள் தற்கால டெக்னாலஜி உலகில் ஒருசில மணி நேரங்களில் டிவிடியாகவும், ஆன்லைனிலும் வந்துவிடுவதால் அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைவதோடு, அந்த படத்திற்காக உழைத்த நூற்றுக்கணக்கானோர்களின் உழைப்பு வீணாகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட அவர் தீவிரமாக சிந்தித்து வருகிறார்.
 
இந்த நிலையில் மயிலாடுதுறை நகரில் உள்ள ஒரு திரையரங்கத்தில் சமீபத்தில் வெளியான தினேஷ் நடித்த  'ஒரு குப்பை கதை' திரைப்படம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கபட்டது. 
 
இதுகுறித்த தகவல் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்களின் தலைமையில் செயல்படும் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறை அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தும் அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்