காத்து வாங்கும் தியேட்டர்கள் - கல்லா கட்டுமா காலா?

வெள்ளி, 8 ஜூன் 2018 (09:02 IST)
தமிழகம் முழுவதும் காலா திரைப்படம் வெளியான பல தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை மந்தமாக இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, போலீசாரை தாக்கியதும், கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள்தான் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. 
 
இதனால், அவர் நடித்து வெளியாகவுள்ள காலா படத்தை பார்க்க மாட்டோம் என பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், காலா படம் நேற்று வெளியனது. ஏற்கனவே முன்பதிவு மந்தமாக இருந்த நிலையில் பல மாவட்டங்களில் தியேட்டர்கள் காலியாக இருக்கிறதாம்.   
 
வழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால், சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய தியேட்டர்களிலேயே வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் டிக்கெட் இன்னும் புக் ஆகாமல் காலியாக கிடக்கிறது. மிக சொற்பமான டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்யப்பட்டிருக்கிறதாம்.
 
குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆன்லைன் முன்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஈரோடு, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சற்று புரவாயில்லை எனக் கூறினாலும், தியேட்டர் ஹவுஸ்புல் ஆகவில்லையாம். 
 
இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்