வாத்தி வொர்த் இல்ல... அர்த்தமில்லாத பாடல் வரிகள்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

செவ்வாய், 10 மார்ச் 2020 (17:43 IST)
மாஸ்டர் படத்தின் " வாத்தி கம்மிங்" என்ற இரண்டாவது பாடலிற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த விஜய் ரசிகர்கள்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சும்மா கிழி, சொடக்கு மேல போன்ற ரேஞ்சிற்கு அனிருத் பாடலை அமைத்திருப்பார் என எதிர்பார்த்தால் அர்த்தமே இல்லாமல் பாடல் வரிகள் அமைத்து தர லோக்கலான இசையில் வாத்தி பாடல் வெளியாகியுள்ளது.

திரையரங்கில்... மிகுந்த கொண்டாட்டத்தில்... நுற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடும் இடங்களில் இந்த பாடல் ஓரளவிற்கு ஒர்க்அவுட் ஆகும் என நினைத்தாலும்,  மாஸ்டர் குழுவிடம் இருந்து இப்படி ஒரு பாடலை நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே விஜய் ரசிகர்களுக்கு வாத்தி சற்று ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார்.


இருந்தாலும் இந்த பாடலுக்கு விஜய்யின் நடனம் வேற லெவல் தர லோக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிரிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ள விஜய்யின் ஒரு சில டான்ஸ் ஸ்டெப் பார்க்கும்போதே செம மாஸாக இருக்கிறது. எனவே வீடியோ தரமான சம்பவமாக இருக்கும் என நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்