’தளபதி 65’ இயக்குனர் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்

செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (13:01 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை யார் இயக்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கவிருப்பதாக 99% செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுதா விதித்த நிபந்தனைகளுக்கு விஜய் ஒப்புக்கொள்ள மறுத்ததை அடுத்து இந்த படம் தற்போது டிராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை தற்போது மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் இயக்கவிருப்பதாக புதிய தகவல் ஒன்று கூறுகின்றன. மேலும் சூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
முதல்முறையாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துடன் விஜய் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்