பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்குகிறதா மாஸ்டர்? சோலோ ரிலீசாகுமா ஈஸ்வரன்?

ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (09:35 IST)
பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்குகிறதா மாஸ்டர்?
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளிவந்து விட்ட நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது 
 
ஆனால் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொங்காமல் இருப்பதும், ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இங்கிலாந்து உள்பட ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாவதை அடுத்து மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டதால் தற்போது உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதனால் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஜனவரி 13-ல் ரிலீஸ் ஆகுமா? அல்லது அதே தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா என்ற பேச்சு தற்போது கோலிவுட்டில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள பொங்கல் தினத்தில் மாஸ்டர் பின்வாங்கினால், ஈஸ்வரன்’ சோலோவாக ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்