தல ஸ்டைலில் ரேஸ் பைக் ஓட்டும் தளபதி பட நடிகை - மாஸ் வீடியோ!

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (14:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.     ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர். ரஜினி , விஜய் ரசிகர்களை வசீகரம் செய்த மாளவிகா தற்போது அஜித் ரசிகர்களை வளைக்க ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

ஆம், அஜித் ஸ்டைலில் ரேஸ் பைக் ஓட்டும்  வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ட்ரெண்டாகியுள்ளார். மேலும் இது குறித்து "புது விஷயங்களை கற்றுக்கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் தனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. இதுவரை சாதாரண பைக்களை ஓட்டியுள்ள எனக்கு  இது மிகவும் நன்றாக உள்ளது.  சென்ற வருடம் ஜூனில் சில சிறந்த பைக் ரைடர்கள் உடன் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் டிராக்கில் பைக் ஓட்டினேன். நொய்டாவில் இருக்கும் புத் இன்டர்நேஷனல் சர்கியூட் மிரட்டலாக இருந்தது. ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டிய அந்த நாளை மிஸ் செய்கிறேன். அங்கு கிடைத்த சிறந்த அனுபவத்தையும், உணர்ந்த adrenaline rushயை மிஸ் செய்கிறேன்” என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இதை விஜய் ரசிகர்கள் நண்பன் அஜித் ஸ்டைலில் பைக் ஓடும் தலைவி என கூறி ஷேர் செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

With all the pressure to learn “new skills” indoors, this is an appreciation post to learning new skills outdoors. Taking my love for bike riding a notch higher, last June I rode with some of the best riders at India’s first formula one track, the intimidating ‘Buddh international circuit’ in Noida.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்