தமன்னா மீது மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் வழக்கு!

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:10 IST)
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் தமன்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கினார்.

ஆனால் நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுசுயா தொகுத்து வழங்குகிறார். இதுகுறித்து பேசியுள்ள தமன்னாவின் வழக்கறிஞர் ‘மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியினர் இன்னும் சம்பள பாக்கியை கொடுக்கவில்லை. தொழில்முறையாக அவர்கள் நடந்துகொள்ளாத போதும் நிகழ்ச்சியை முடித்துக் கொடுக்கவேண்டும் என தமன்னா விரும்பினார். ஆனால் அவர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தமன்னாவை நீக்கியுள்ளனர். இது சம்மந்தமாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மேல் வழக்கு தொடர உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் தமன்னாவுக்கு முன்பாகவே அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இப்போது தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டனர். அதில் ‘தமன்னா எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 18 நாட்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசினோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே நடித்தார். அதனால் 1.50 கோடி சம்பளம் கொடுத்துள்ளோம். இந்நிலையில் அவர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பேசி வருகிறார். மீதிப் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் பணத்தைக் கொடுக்க தயாராக இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்