’மாஸ்டர்’ 50வது நாளில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் வீடியோ!

புதன், 3 மார்ச் 2021 (14:58 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50வது நாட்கள் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்களும் ’மாஸ்டர்’ படக்குழுவினரும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர் 
 
லாக்டவுனுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடும் முதல் படம் ’மாஸ்டர்’ திரைப்படம் தான் என்பது கோலிவுட் திரை உலகிற்கே ஒரு பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் சற்று முன்னர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தின் 50வது நாள் குறித்த ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்