உலக சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் மர்லின் மன்றோ. இவர்,ஜென்டில்மென் பிரீபெர் பிளான்ட்ஸ், சம் லைக் இட் ஹாட், தி செவன் இயர் இட்ச், தி மிஸ் ஃபிட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் பீக்கில் இருக்குபோதே, தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
ஏற்கனவே சில முறை இவரின் வாழ்கைக் கதை ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை blonde என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான அனா டி ஆர்மாஸ் மர்லின் மன்றோ வேடத்தில் நடித்துள்ளார்.