மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தில் இணைந்த பிரபல நடிகை!

திங்கள், 21 நவம்பர் 2022 (15:37 IST)
மாரி செல்வராஜ் இயக்கும் வாழை படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ள நிலையில் படத்தில் கதாநாயகியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்