இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மாரிசெல்வராஜ் இன்றைய பெண்களின் நிலை குறித்து பேசியபோது கமல்ஹாசன் நடித்த பாபநாசம் என்ற திரைப்படத்தினை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த படத்தில் இளைஞர் ஒருவர் கமல்ஹாசன் மகளை அவருக்கு தெரியாமல் வீடியோ ஒன்றை எடுத்து விடுவார். அது குறித்து கமல்ஹாசன் தனது மகளிடம் கூறியபோது உனக்கே தெரியாமல் வீடியோ உன்னை வீடியோ எடுத்ததற்கு நீ கவலைப்பட வேண்டாம் என்று கூறுவார் என்றும் உன்னை படமெடுத்தவன் தான் வெட்க படனும் நீ ஏன் வெட்கப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார் என்றும் கூறினார்.
தனது மகளை காப்பாற்றும் திட்டம் மட்டுமே கமல் வகுப்பார் என்றும், வீடியோ எடுத்தவனின் குற்றத்தை தனது மகளிடம் சுட்டிக்காட்டி நீ குற்றமும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த படம் இன்றைய சமூக நிலையை பதிவு செய்வதாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்
இதற்கு நெட்டிசன்கள் மாரி செல்வராஜ்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த படத்தில் கமல்ஹாசனின் கேரக்டரான சுயம்புலிங்கம் ஓர் எளிய சராசரி மனிதர் என்றும் அவருடைய கதாபாத்திரத்தின் வழியாக பார்க்கும்போது ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியின் மகனால் தனது மகள் பாதிக்கப்பட்டதை அடுத்து பயத்தின் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானவர்களிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் மட்டுமே அவருக்கு இருந்தது என்றும் அந்த நேரத்தில் அவர் சமகால சமுதாயத்தை சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர்