மார்ச் 10 மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாகுமா?

திங்கள், 6 மார்ச் 2017 (18:15 IST)
லாரன்ஸ் நடிப்பில், சாய் ரமணி இயக்கத்தில் ஆர்.பிசௌத்ரி தயாரித்திருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா அறிவித்தபடி மார்ச்  10 வெளியாகுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

 
இந்தப் படம் தயாராகி பல மாதங்களாகிறது. படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் மதன் வாங்கியிருந்ததால்,  அவரது கைது நடவடிக்கை படத்தை முடக்கியது. பல்வேறு பஞ்சாயத்துகள் சட்ட சிக்கல்களைக் கடந்து கடைசியாக மார்ச் 10  படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
 
பலமுறை வெளியீட்டு தேதி தள்ளிப் போனதால் மார்ச் 10 அறிவித்தபடி படம் வருமா என்பதில் விநியோகஸ்தர்கள் மத்தியில்  குழப்பம் நிலவுகிறது.
 
இந்தப் படத்துக்காக தனது மொத்த சம்பளத்தையும் விட்டுத் தந்திருக்கிறnர் லாரன்ஸ் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்