விஜய் மற்றும் அஜித்தின் அறிமுக பட வீடியோவை பகிர்ந்த ப்ளூசட்டை மாறன்

புதன், 9 நவம்பர் 2022 (20:13 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் முதல் அறிமுக பட வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ப்ளூசட்டை மாறன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும்  ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில்,   நடிகர் அஜித்குமார் அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும், கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தின் இயக்குனர் செண்பகராமன். இப்படத்தில்  ஹீரோவாக சுரேஷும்,ஹீரோயினாக நதியாவும் நடித்திருந்தனர். இப்படம் அதே ஆண்டு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிகர் அஜித்குமார்  நடித்துள்ள ஒரு வீடியோவை ப்ளூசட்டை மாறன் வெளியிட்டுள்ளார்., அது வைரலாகி வருகிறது.

அதேபோல் நாளைய தீர்ப்பு  என்ற படத்தில்  நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும், அவரது தந்தை இயக்கத்தில், 1984 ஆம் ஆண்டு வெளியான வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு முன்னணி நடிகர்ளின்  வீடியோவையும் ப்ளூசட்டை மாறன் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

Edited by Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்